பீகார் மாநிலத்தில், மாமியாருடன் தகாத உறவில் ஈடுபட்ட மருமகனை உறவினர்கள் கையும் களவுமாக பிடித்து, கிராம பஞ்சாயத்து முன்னிலையில் திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. பாட்னா மாவட்டத்தில், சிக்கந்தர் யாதவ் என்ற நபர் தனது மனைவி இறந்த பிறகு, மாமனார் மற்றும் மாமியாருடன் வாழ்ந்தார். இந்த நிலையில், சிக்கந்தருக்கும் அவரது மாமியாரான கீதா தேவிக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இந்த விவகாரம் மாமனாருக்கு தெரியவந்ததும், அவர் கிராம பஞ்சாயத்துக்கு புகார் செய்தார். பஞ்சாயத்து விசாரணையில் இருவரும் தங்களுக்குள் உள்ள உறவை ஒப்புக்கொண்டனர். பின்னர், கிராம மக்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.